பாட்டி வைத்தியம்

 1. கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லாம் கலந்து சாப்பிட பெண்களுக்கு கருப்பை சுத்தமாசம்.
2. 3 நெல்லிக்காய்களை இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வடிக்கட்டவும். அதனுடன் சிறிது தண்ணீர் சுவைக்க தேன் சேர்த்து அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 3. 2 வெற்றிலையுடன் 9 மிளகு சேர்த்து சிறிது தேங்காய் துண்டுகளையும் சேர்த்து மென்று விழுங்கினால் தேள் விஷம் உடனடியாக இறங்கிவிடும்.
4. தினமும் காலையில் சுடுநீரில் அரை டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புகளை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
5. திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் தேய்த்து வர பல் கூச்சம் குறையும்.
6. கால் ஸ்பூன் மஞ்சள்பொடி, 2 ஏலக்காய் தட்டிப்போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி தேன் கலந்து 50மி.லி இரவு தூங்க போகும் முன் குடித்து வர குறட்டை நிற்கும். சளியும் கரையும்.
7. 5 முதல் 10 நிகத்யகல்யாணிப் பூ. கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்து வர சர்க்கரை அளவு சறையும். ரத்த அழுத்தம் சீராகும்.
8. திருநீற்றுப்பச்சிலையை நகர்ந்து பார்த்தாலோ, தலையணையமயில் வைத்து தாங்கினாலே நிம்மதியாக தூக்கம் வரும்.
9. வெள்ளைப் பூசணிக்காய் துருவல், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்த மல்லி, கறிவேப்பிலை,  தாளித்து தயிரில் கலந்து பச்சையாக சாப்பிட்டால் தலைசுற்றல், கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு கட்டுப்படும்.
10. வாழைப்பூ சாற்றுடன், கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும்.


Popular posts