ஒரு ராஜாவிடம் வந்த பொற்கொல்லர் ஒருவர், ராஜாவே உங்களுக்கு ஏதாவது நகை செய்ய வேண்டுமா? எனக் கேட்டார். அவரைக் கண்டு எரிச்சல்பட்ட ராஜா, "ஆமாம் எனக்கு ஒரு மோதிரம் வேண்டும். செய்து கொண்டு வா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் துக்கத்தில் இருக்கும் போது அதைக் கண்டால் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும் போது அந்த மோதிரத்தைக் கண்டால் துக்கப்பட வேண்டும். அந்த மோதிரம் அப்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலை துண்டிக்கப் படும் என்று சொல்லி அனுப்பினார்.
இப்படி ஒரு மோதிரத்தை எப்படி செய்வது என் பொற்கொல்லர் திகைத்தார். தண்டனையை நினைத்து கண் கலங்கினார். இதைக் கண்ட ராஜாவின் மகன் சிறுவன் சாலமோன், "பொற்கொல்லரே இதற்காகவா அழகிறார்கள்? சாதாரண ஒரு மோதிரம் செய்து அதில் எல்லாம் கடந்து போகும் என்ற வாசகத்தைப் பொறியங்கள். பிரச்சனை முடிந்தது” என்றான்.
பொற்கொல்லரும் அவ்வாறே செய்து முடித்தார். அதைப் பெற்ற ராஜா, "ஆஹா, அருமை! என பொற்கொல்லரை கட்டித் தழுவினார்.
"இனி நீ அழுதுக்கொண்டிராய் உன் கூப்பிடுதலின் சத்தத் துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்ஷனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்" ஏசாயா.30:19
எனவே பிரச்சனை வந்தால் அழாமல் ஊக்கமாய் ஜெபியுங்கள்.